திருவனந்தபுரம், மார்ச் 25: எர்ணாகுளம் அருகே ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலியானார்கள். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள காலடி மலையாற்றூர் பகுதியைச் சேர்ந்தவர் கங்கா(48). இவரது மகன் தார்மிக் (7). 2 பேரும் வீட்டுக்கு அருகில் உள்ள பெரியார் நதியில் அடிக்கடி குளிக்கச் செல்வது வழக்கம். அதன்படி நேற்று முன்தினம் மாலை வழக்கம்போல தந்தையும், மகனும் குளிப்பதற்காக ஆற்றுக்கு சென்றனர். ஆனால் நீண்ட நேரமாகியும் 2 பேரும் வீடு திரும்பவில்லை. அதைத்தொடர்ந்து வீட்டினரும், அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சென்று தேடிப் பார்த்துள்ளனர். அப்போது தந்தை, மகனின் உடல்கள் ஆற்றில் மிதந்தது தெரியவந்தது. இது குறித்து அறிந்ததும் மலையாற்றூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று 2 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக எர்ணாகுளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
The post எர்ணாகுளம் அருகே ஆற்றில் மூழ்கி தந்தை, மகன் பலி appeared first on Dinakaran.