×

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5,258 கோடி பட்ஜெட்டிற்கு ஒப்புதல்: கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5258.68 கோடியில் வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. திருமலையில் உள்ள அன்னமய்யா பவனில், திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது. அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர்.நாயுடு தலைமை தாங்கினார். தொடர்ந்து, கூட்டத்தில் ரூ.5258.68 கோடியில் 2025-26ம் நிதியாண்டுக்கான வருடாந்திர வரவு செலவுடன் கூடிய பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்நிலையில், ஏழுமலையானுக்கு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை மூலம் கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி கிடைத்தது.

அதேபோல் போல், இந்த ஆண்டு ரூ.1,729 கோடி காணிக்கை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டு தேவஸ்தானம் பல்வேறு வங்கிகளில் வைத்திருக்கும் நிரந்தர வைப்பு நிதிகளுக்கு வட்டியாக ரூ.1,253 கோடி கிடைத்த நிலையில், வரும் நிதியாண்டில் ரூ.1,310 கோடியும், கடந்த ஆண்டு லட்டு உள்ளிட்ட பிரசாத விற்பனை மூலம் ரூ.550 கோடி வருவாய் கிடைத்த நிலையில், வரும் ஆண்டில் ரூ.600 கோடியும், தரிசன டிக்கட்டுகள் விற்பனை மூலம் ரூ.305 கோடி வருவாய் கிடைத்த நிலையில், ரூ.310 கோடி வரும் ஆண்டில் வருமானமாக கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.5,258 கோடி பட்ஜெட்டிற்கு ஒப்புதல்: கடந்த ஆண்டு ரூ.1,671 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Tags : Tirupati Ezhumalaiyan Temple ,Tirumala ,Tirumala Tirupati ,Devasthanams ,Annamayya Bhavan ,Chairman of the Board of Trustees ,P.R. Naidu ,Dinakaran ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 18 மணிநேரம் காத்திருந்து தரிசனம்