சென்னை: சட்டத்துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும், இருந்த இடத்தில் இருந்தவாறே, தங்களது பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ளும் வகையில் 17 மடிக்கணினிகளை அமைச்சர் ரகுபதி நேற்று வழங்கினார். சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று சென்னை தலைமை செயலகத்திலுள்ள சட்டத்துறை நூலகத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சியில் சட்டத்துறை பணியாளர்களுக்கு சிறந்த முறையில் பயிற்சி வழங்கிட ஏதுவாக வழங்கப்பட்ட ‘இன்டராக்டிவ் இன்டெலிஜென்ட் பேனல்’ எனப்படும் பெரிய தொடு திரையினை தொடங்கி வைத்தார்.
மேலும், சட்டத்துறை அதிகாரிகள் எந்த நேரத்திலும், இருந்த இடத்தில் இருந்தவாறே, தங்களது பணிகளை தங்கு தடையின்றி மேற்கொள்ள ஏதுவாக அவர்களுக்கு 17 மடிக்கணினிகளையும் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சட்டத்துறை செயலாளர் ஜார்ஜ் அலெக்சாண்டர் மற்றும் துறையின் அனைத்து உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
The post பணிகளை தடையின்றி மேற்கொள்ள சட்டத்துறை அதிகாரிகளுக்கு 17 மடிக்கணினிகள்: அமைச்சர் ரகுபதி வழங்கினார் appeared first on Dinakaran.