தேவையான பொருட்கள்
1/2 கிலோ சேனைக்கிழங்கு
3 பெரிய வெங்காயம்
2 தக்காளி
2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1_1/2 டேபிள்ஸ்பூன் சாம்பார் பொடி
1 ஸ்பூன் கரம் மசாலா தூள்
1/2 ஸ்பூன் மல்லித்தூள்
1/2 ஸ்பூன் சீரகத்தூள்
1 ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையான அளவுஉப்பு
1 டேபிள்ஸ்பூன் வெல்லம்
4 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்
1 ஸ்பூன் கடுகு
1 ஸ்பூன் சீரகம்
1/4 ஸ்பூன் பெருங்காயத்தூள்
சிறிதுகறிவேப்பிலை
சிறிதுகொத்தமல்லி தழை
மசாலா விழுது அரைக்க:
1/4 கப் தேங்காய் துருவல்
1 ஸ்பூன் சோம்பு
15 முந்திரி
1 பச்சைமிளகாய்
செய்முறை
சேனைக்கிழங்கை தோல் சீவி நறுக்கி கொள்ளவும்.கொதிக்கும் நீரில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நறுக்கிய சேனைக்கிழங்கு சேர்த்து முக்கால் பாகம் 85% வரை வேகவிடவும்.பின் தண்ணீரை வடிகட்டி கொள்ளவும்.வாணலியில் எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சீரகம் சேர்த்து வெடித்ததும் நறுக்கிய வெங்காயம் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் பின் நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.பின் சாம்பார் பொடி மல்லித்தூள் சீரகத்தூள் கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களை மிக்ஸியில் போட்டு நைசாக அரைத்து எடுக்கவும் பின் அரைத்த விழுதை சேர்த்து இரண்டு நிமிடம் வரை நன்றாக வதக்கவும் பின் சிறிது தண்ணீர் ஊற்றி பச்சை வாசனை போக கொதிக்க விடவும் பின் வேகவைத்த சேனைக்கிழங்கு சேர்த்து நன்கு கிளறவும்.பின் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கிளறவும் ஏற்கெனவே காய் வேக உப்பு சேர்த்திருப்பதால் கவனமாக சேர்க்கவும்.பின் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட்டு வெல்லம் சேர்த்து நன்கு கிளறி கொத்தமல்லி தழை மற்றும் பெருங்காயத்தூள் தூவி கலந்து இறக்கவும் சுவையான ஆரோக்கியமான சேனைக்கிழங்கு கறி ரெடி.
The post சேனைக்கிழங்கு கறி appeared first on Dinakaran.