தேவையான பொருட்கள்:
1/4கி வெண்டைக்காய்
1எலுமிச்சை அளவு புளி
3ஸ்பூன் எண்ணெய்
1ஸ்பூன் கடுகு
1கொத்து கறிவேப்பிலை
1/4ஸ்பூன் வெந்தயம்
1பெரிய வெங்காயம்
1தக்காளி
10சாம்பார் வெங்காயம்
1ஸ்பூன் சீரகம்
1/2மூடி தேங்காய்
1ஸ்பூன் குழம்பு மிளகாய் தூள்
1ஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள்
1/4ஸ்பூன் மஞ்சள் தூள்
தேவையானஅளவு உப்பு
செய்முறை:
ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு நறுக்கிய வெண்டைக்காய் நறுக்கிய பெரிய வெங்காயம் வெந்தயம் சேர்த்து நன்றாக பொன்னிறமாகும் வரை வதக்கவும்.வெண்டைக்காயுடன் வெங்காயமும் வெந்தயமும் சேரும்போது வதக்கும் போதே மணம் அருமையாக இருக்கும். புளியை அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கரைத்துக்கொள்ளவும் அத்துடன் மிளகாய் தூள் இரண்டையும் சேர்த்து மஞ்சள் தூளையும் சேர்த்து கொதிக்கவிடவும்.காஷ்மீரி மிளகாய் தூள் சேர்த்தால் கலர் நன்றாக இருக்கும்.காரம் அதிகமாக தேவை என்றால் இன்னும் சிறிது மிளகாய்த்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.குழம்பு கொதித்துக் கொண்டிருக்கும்போது அத்துடன் தக்காளியும் சேர்த்து கொதிக்க விடவும்.மிக்ஸி ஜாரில் தேங்காய் வெங்காயம் சீரகம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்.. அரைத்த விழுதை கொதித்துக் கொண்டிருக்கும் புளிக் கரைசலில் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். அத்துடன் தேவையான உப்பையும் சேர்க்கவும்.வெண்டைக்காய் குழம்பு கொதித்த பிறகு தான் சேர்க்க வேண்டும் முதலிலேயே சேர்த்து விட்டால் குழம்பு கொழகொழவென்று ஆகிவிடும்.குழம்பின் பச்சை வாசனை போன பிறகு அதில் வெண்டைக்காய் சேர்த்து வேகவிடவும். வெண்டைக்காய் ஏற்கனவே வதக்கி இருப்பதால் அது பாதி வெந்திருக்கும் அதனால் சிறிது நேரம் வேக விட்டால் போதுமானது.குழம்பு கொதித்து கெட்டியானதும் இறுதியாக கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.ஒரு கடாயில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை தாளித்து குழம்பில் சேர்க்கவும்.இப்போது சூடான சுவையான காரசாரமான கிராமத்து வெண்டைக்காய் கார குழம்பு தயார்.
The post கிராமத்து வெண்டைக்காய் காரக்குழம்பு appeared first on Dinakaran.