மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் திருக்கோயில்!!

ஒவ்வொரு கோயில்களும் சூட்சுமமாக ஒவ்வொரு ஆற்றல்களை சுமந்துள்ளன. இந்த ஆற்றல்களின் வாயிலாக நமது குறைகளை, குணங்களை, நம் தொடர்புகளை பிரபஞ்சத்தின் சக்தியோடு இணைத்து நாம் வேறு ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறோம். பிரகலாதனின் பேரன்தான் இந்த மகாபலி சக்கரவர்த்தி. இவரின் குருவாக சுக்ராச்சாரியார் இருந்தார். இந்த மகாபலி இந்த முவுலகிற்கும் நானே அரசன். அதுமட்டுமின்றி அதைவிட பெரிய தலைமை பதவி வேண்டும் என சுக்ராச்சாரியாரின் ஆலோசனைப்படி ஒரு யாகம் செய்வதற்கு தயாரானார். யாகமும் தொடங்கியது.அந்த யாகத்தால் இந்திரனின் பதவியும் போய்விடும் என்பதால் தேவர்கள் மகாபலியிடம் போரிட்டு தோற்றனர். ஆகவே, மஹா விஷ்ணுவிடம் முறையிடவே, விஷ்ணு வாமன அவதாரத்தை எடுத்தார். சுக்ராச்சாரியாரின் திட்டத்தின் படி யாகம் முடிந்து தானம் கொடுப்பது வழக்கம். அவ்வாறு தானம் கொடுத்துக் கொண்டிருக்கும் இடத்திற்கு வந்தார். தானம் பெற வந்தார். மகாபலி இப்பொழுதுதான் தானம் கொடுத்து முடித்தேன் என்றார்.

அதற்கு வாமனன் “நானோ மூன்றடி உயரமே, நான் உங்களிடம் என்ன பெற முடியும். என் உயரத்தைப் போலவே மூன்றடி நிலம் கொடுத்தால் போதும்” என்றார். மகாபலி தன் கமண்டலத்தில் ஜலத்தை ஊற்றி வாமனனுக்குத் தானம் கொடுக்க முயற்சித்த பொழுது, வந்தது விஷ்ணு என அறிந்து வண்டாக மாறி கமண்டலத்தின் துவாரத்தை அடைத்தார். மகாபலி கமண்டலத்திலிருந்து தண்ணீர் வரவில்லை என்ன செய்வது என யோசித்த போது வாமனன் தர்ப்பை ப் புல்லால் குத்தவே, சுக்ராச்சாரியாரின் ஒரு கண் குருடானது. தன் தவறை உணர்ந்த சுக்ராச்சாரியார் பல இடங்களில் வாமனரின் அறிவுரைப்படி பல இடங்களில் சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வணங்கினார். அதில் ஒரு தலமே வெள்ளீஸ்வரர் திருத்தலம்.

இத்தலமானது காமாட்சி அம்மன் உடனுறை வெள்ளீஸ்வரர் தரிசனம் கொடுக்கின்றார்கள். இத் தெய்வங்களான காமாட்சி அம்மனுக்கு சனி, சுக்ரன் நாமம் கொடுத்துள்ளது. அதுபோலவே வெள்ளீஸ்வரருக்கு சூரியன் மற்றும் சுக்ரன் நாமகரணம் செய்துள்ளது.மேஷ-ரிஷப லக்னத்திற்கு இரண்டில் சூரியன், சனி இருந்தால் கண் பார்வை குறை ஏற்பட வாய்ப்புண்டு. ஆகவே, அவர்கள் ஏகாதசி திதியன்று வெள்ளை மொச்சை மற்றும் தர்ப்பைப் புல் கொடுத்து நெய்வேத்தியம் செய்து வெள்ளைப் பசுவிற்கு கொடுத்தால் கண் பிரச்னைகள் குணமாகும்.லக்னத்திற்கு 7ம் பாவகத்திலோ 8ம் பாவகத்திலோ சனி அமர்ந்தால் திருமணம் தாமதமாகும். மாங்கல்ய தோஷமாகும். அவர்கள், இக்கோயிலில் வெள்ளிக்கிழமை் ஏகாதசி திதியில் சுவாமியை தரிசனம் செய்து திருமணம் ஆகாத பெண்ணிற்கு ஆடை மற்றும் அழகு சாதனப் பொருட்கள் தானமாக கொடுத்தால் திருமணம் தாமதம் மற்றும் மாங்கல்ய தோஷம் விலகும். அரசியலில் வெற்றி பெற பௌர்ணமி தினத்தன்று சுவாமிக்கு நல்லெண்ணெய் அபிஷேகம் செய்து வெள்ளை மொச்சை, கோதுமை நெய்வேத்தியம் செய்து கறுப்பு நிற பசுவிற்கு தானமாக வழங்கினால் அரசியலில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

அரசு தொடர்புடைய அரசாங்க பதவிகள் கிடைப்பதற்கு ஞாயிற்றுக்கிழமை அருகம்புல் மாலையும் வெற்றிலை மாலையும் சுவாமிக்கு கொடுத்து கறுப்புநிற பசுவிற்கு அகத்திக் கீரையும் கோதுமையில் செய்த இனிப்பும் உணவாக வழங்கினால் உயர் பதவிகள் கிட்டும்.இங்கு சுவாமி தரிசனம் செய்து வெள்ளை பசுவிற்கு உணவு வழங்கினால் வீட்டில் லெட்சுமி கடாட்சம் உண்டாகும். பொன், பொருள் சேரும். திருமயிலையின் சப்த ஸ்தானம் என்று அழைக்கப்படுகின்ற கோயில்களில் வெள்ளீஸ்வரர் திருத்தலமும் உள்ளது.

The post மயிலாப்பூர் வெள்ளீஸ்வரர் திருக்கோயில்!! appeared first on Dinakaran.

Related Stories: