செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளது: நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல்

சென்னை: இரண்டு நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடியது. தமிழக அரசின் 2025-26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை கடந்த 14ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். மறுநாள் (15ம் தேதி) வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார்.

தொடர்ந்து கடந்த 17ம் தேதி முதல் நிதிநிலை அறிக்கையின் மீது பொது விவாதம் நடந்தது. விவாதத்தில் எம்எல்ஏக்கள் பேசினர். இந்த விவாதம் தொடர்ந்து 20ம் தேதி வரை நடந்தது. 21ம் தேதி பொதுவிவாதத்திற்கு பதில் அளித்து நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலளித்து பேசினர். தொடர்ந்து சனி, ஞாயிறு என்பதால் கடந்த 2 நாட்கள் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறவில்லை.

இந்நிலையில் இன்று காலை 9.30 மணிக்கு மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்படும். உறுப்பினர்கள் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். தொடர்ந்து துறை ரீதியான மானியக்கோரிக்கை விவாதம் தொடங்கியது.

முதல் நாளான இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடக்கிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் பேசுவர். தொடர்ந்து உறுப்பினர்களின் விவாதத்திற்கு பதில் அளித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசி, புதிய அறிவிப்புகளை வெளியிடுவார்.

அதன்படி அறிவிப்புகளை வெளியிட்டார் தமிழ்நாட்டில் கனிமங்கள் மூலம் 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,704 கோடி வருவாய் ஈட்டப்பட்டுள்ளது என்று சட்டப்பேரவையில் நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி வரையான காலத்தில் அபராதமாக மட்டும் ரூ.60 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. சட்டத்துக்கு புறம்பாக கனிமங்களை எடுத்துச் சென்ற 3,741 வாகனங்கள் பறிமுதல் செய்ய்யப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளது. இதேபோல, பூண்டி நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் படிவின் அளவு ட்ரோன் மூலம் கண்காணிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளத்தடுப்புக்காக ரூ.22,000 கோடியில் திட்டம் குடிநீர் தேவை மற்றும் வெள்ளத் தடுப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.22,000 கோடியில் திட்டம் உருவாக்கப்படும்.

 

The post செம்பரம்பாக்கம் ஏரியில் நீரின் தரத்தைக் கண்காணிக்க நிகழ்நேர சென்சார் கருவி நிறுவப்பட்டுள்ளது: நீர்வளத்துறை கொள்கை விளக்கக் குறிப்பில் தகவல் appeared first on Dinakaran.

Related Stories: