திருச்சி : திருச்சி விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து 5 கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன. கோலாலம்பூரில் இருந்து விமானம் மூலம் திருச்சிக்கு கடத்தி வரப்பட்ட உயர்ரக கஞ்சாவை பறிமுதல் செய்தது சுங்கத்துறை. ஹைட்ரோபோனிக் கஞ்சா கடத்தி வந்த பயணியிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.