×

சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை : அமைச்சர் எ.வ.வேலு!!

சென்னை : சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு ஆய்வில் உள்ளது என்று பாமக எம்.எல்.ஏ. அருள் கேள்விக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்துள்ளார். மேலும் தேனி – மதுரை நெடுஞ்சாலையில் ரயில்வே பாலம் அமைக்கும் பணிகள் மிக மெதுவாக நடக்கிறது. விரைவு படுத்த வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் கோரிக்கை விடுத்ததற்கு, ஒன்றிய அரசுக்கு கடிதம் அனுப்பி, அந்த திட்டப் பணிகளை விரைந்து முடிக்கத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பதில் அளித்தார்.

The post சேலம் மாநகரைச் சுற்றி 45 கி.மீ நீளத்திற்கு சுற்றுச் சாலை அமைக்க விரிவான திட்ட அறிக்கை : அமைச்சர் எ.வ.வேலு!! appeared first on Dinakaran.

Tags : Salem ,Minister ,Chennai ,Pamaka M. L. A. ,Minister of Public Works ,Velu ,Dinakaran ,
× RELATED சேலம் பெரியார் பல்கலை. முறைகேடு வழக்கு...