நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை அணியை, சென்னை அணி வென்றது. இதையடுத்து சென்னை அணியின் 2வது போட்டியில் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் வரும் வெள்ளி (மார்ச் 28) அன்று நடைபெற உள்ளது.
2 அணிகளும் முதல் போட்டியில் வென்றுள்ளதால் வரும் மார்ச் 28ம் தேதி நடைபெறும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை டிக்கெட் நாளை (மார்ச் 25) காலை 10.15 மணிக்கு ஆன்லைனில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. www.chennaisuperkings.com என்ற இணையதளத்தில் டிக்கெட்டுகளை பெறலாம்.
அதேபோல இலவச டிக்கெட் பெற ரசிகர்களுக்கு வினாடி வினா போட்டியும் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் அதிகாரபூர்வ சிஎஸ்கே இணையதளத்தில் சென்று பதிவு செய்துகொள்ளலாம். கடந்த ஐபிஎல் தொடரில் தொடர் வெற்றிகளை பெற்று சென்னை அணியை வீழ்த்தி, பெங்களூரு அணி பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றது.
கடந்த சீசனை விட இந்த சீசனில் பெங்களூரு அணி மிகவும் பலம் வாய்ந்த அணியாக காணப்படுகிறது. அதனால் சென்னை அணி எவ்வாறு பெங்களூரு அணியை எதிர்கொள்கிறது என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
The post ஐபிஎல் தொடரில் சென்னை – பெங்களூரு அணிகளுக்கிடையேயான டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம் appeared first on Dinakaran.