வேதாரண்யம், மார்ச் 24: வேதாரண்யம் தாலுக்கா துளசியா பட்டணத்தில் தமிழ் புலவர் ஔவைக்கு 51வது ஆண்டு அவ்வை பெருவிழா நடைபெறுகிறது.வேதாரண்யம் அடுத்த துளசியாப்பட்டினத்தில் விஸ்வநாதர் கோயில் உள்ளது. கோவிலில் தனி சன்னதியாக ஒளவையார் உள்ளார். ஆண்டுதோறும் இந்து சமய அறநிலை சார்பாக அவ்வை பெருவிழா நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 51வது ஆண்டாக நடைபெறும் அவ்வை பெருவிழாவிற்கு முகூர்த்த கால் ஊன்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் ஆத்மா திட்ட மாவட்ட ஆலோசனை குழு தலைவர் உதயம் முருகையன், கோயில் செயல் அலுவலர் தர்மராஜ், ஆய்வாளர் சுரேஷ்குமார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி குமார், வழக்கறிஞர் சீனிவாசன், கோவில் கணக்கர் ரவி உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் கிராம மக்கள் கோவில் பணியாளர்கள்கலந்து கொண்டனர்.ஒளவை பெருவிழா வருகிற 26ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் அரசு விழாவாக நடைபெறுகிறது. முதல் நாள் 26ம் தேதி மாலை நிகழ்ச்சியில், விஸ்வநாதர், அவ்வைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சந்தன காப்பு அலங்காரமும், பட்டிமன்றமும் நடைபெறுகிறது.
The post துளசியாபட்டணத்தில் 51வது ஆண்டு அவ்வை பெருவிழா appeared first on Dinakaran.