×

திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குருப் 4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு

 

திருச்சி, மார்ச் 24: திருச்சி மாவட்ட மைய நூலகம், வாசகா் வட்டம், என்.ஆர்.ஐ.ஏ.எஸ்.அகாடமி மற்றும் ரோட்டாி பீனிக்ஸ் இணைந்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குருப் 4 போட்டித் தேர்விற்கு மாதிரி தேர்வு மார்ச்.24ம் தேதி காலை 10 மணி முதல் 1.30 மணி முடிய மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற உள்ளது. இத்தோ்விற்கான மாதிரி தோ்வில் அலகு 1-ல் பொது அறிவியல் (இயற்பியல்), அலகு-2ல் சொல்லகராதி, ஆகஸ்டு2024-ம் மாத நடப்பு நிகழ்வுகள் மற்றும் கணிதத்தில் சதவீதம் ஆகியவற்றிலிருந்து வினாக்கள் இடம் பெறும். இந்த மாதிரி தோ்வில் கலந்து கொள்ள கட்டணம் ஏதும் இல்லை. மாதிாி தோ்வு காலை 10 முதல் மதியம் 1.30 மணி முடிய நடைபெறும் மாதிரி தோ்வில் வினாத் தொகுப்பு வழங்கப்பட்டு ஓ.எம்.ஆர் விடைத்தாளில் பதிலளிக்கும் முறையில் தோ்வு நடைபெறும். மாதிரி தோ்வு முடிந்தவுடன் ஒவ்வொரு வரும் பெற்ற மதிப்பெண்கள் உடனடியாக தொிவிக்கப்பட்டு குறைவான மதிப்பெண் பெற்றவா்களுக்கு மதிப்பெண் அதிகப்படுத்துவதற்கு அறிவுரைகளும், வழிமுறைகளும் வழங்கப்படும்.

The post திருச்சி மாவட்ட மைய நூலகத்தில் குருப் 4 தேர்வர்களுக்கு மாதிரி தேர்வு appeared first on Dinakaran.

Tags : Trichy District Central Library ,Trichy ,Vasaka Circle ,NRIAS Academy ,Roti Phoenix ,Tamil Nadu Public Service Commission Group 4 ,Dinakaran ,
× RELATED திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: பயணியிடம் விசாரணை