×

முதல்வர் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டம்

 

பல்லடம், மார்ச் 24: பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் திமுக சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டம் நேற்று நடைபெற்றது. பல்லடம் அருகேயுள்ள பொங்கலுர் மேற்கு ஒன்றிய திமுக மாதப்பூர் ஊராட்சி திமுக கிளை சார்பில் மாதப்பூரில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 72வது பிறந்தநாள் விழாவையொட்டி கழக அரசின் சாதனை விளக்க பிரசார பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு பொங்கலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் அசோகன் தலைமை வகித்தார்.

பல்லடம் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் லோகுபிரசாத் வரவேற்றார். இக்கூட்டத்தில் மாவட்ட கழக துணை செயலாளர் வக்கீல் குமார், தலைமை கழக பேச்சாளர்கள் திருப்பூர் மனோகர்பாபு, சரத்பாலா ஆகியோர் கழக அரசின் சாதனை திட்டங்கள் குறித்து மக்களிடம் விளக்கி பேசினர். இக்கூட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர். முடிவில் மாதப்பூர் கிளை கழக செயலாளர் கிருஷ்ணசாமி நன்றி கூறினார்.

The post முதல்வர் பிறந்த நாள் விழா தெருமுனை கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,Palladam ,M.K. Stalin ,DMK ,Madhapur ,DMK Madhapur Panchayat ,Pongalur West Union DMK ,Palladam… ,Dinakaran ,
× RELATED ஆளுநர் பதவி என்பது ஒன்றிய-மாநில...