×

திருவள்ளூர் நகர காங்கிரஸ் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

 

திருவள்ளூர், மார்ச் 24: திருவள்ளூரில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பாக ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நகரத் தலைவர் ஜோஷி பிரேம் ஆனந்த் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் அஸ்வின்குமார் முன்னிலை வகித்தார். திருவள்ளூர் எம்பி சசிகாந்த் செந்தில், வடக்கு மாவட்ட தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அப்போது அனைத்து மதத்தினரும் சமாதானத்துடனும், ஒற்றுமையுடனும் இருக்க வேண்டுமென இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தினர்.

பிறகு அனைவருக்கும் நோன்பு கஞ்சி வழங்கப்பட்டது. இதில் பாராளுமன்ற ஒருங்கிணைப்பாளர் சிதம்பரம், மசூதி தலைவர் ஈக்காடு முகமது ரபி, மாநில இளைஞர் காங்கிரஸ் நிர்வாகி திவாகர், மாவட்ட மூத்த துணைத் தலைவர் தளபதி மூர்த்தி, மாவட்ட பொருளாளர் மணவாளன், சுஜித், ஸ்டாலின், கருடா அருண், வட்டார தலைவர்கள் தேவேந்திரன், சதீஷ், நகர நிர்வாகிகள் பிரவீன், பாலாஜி, நகர செயலாளர் ஹஸன் பாஷா, அன்சார், பொறுப்பாளர் மாயாண்டி, முகுந்தன், ராஜேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

The post திருவள்ளூர் நகர காங்கிரஸ் சார்பில் ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ramadan Lent ,Thiruvallur City Congress ,Thiruvallur ,City Congress Committee ,President ,Joshi Prem Anand ,Secretary of State ,Aswinkumar ,Sasikanth Sendil ,Ramalan Lent Opening Ceremony ,Dinakaran ,
× RELATED பொன்னேரியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு!!