×

பெரியபாளையம் அரசுப் பள்ளியில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு

 

பெரியபாளையம், மார்ச் 24: எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஊராட்சி அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் உலக நீர் தினத்தை முன்னிட்டு, தொன் போஸ்கோ வேளாண்மை கல்லூரி இளநிலை இறுதியாண்டு மாணவர்கள் சார்பில், தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு நீர் சேமிப்பு மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, சிறப்பு அழைப்பாளர்களாக பொன்னேரி மாவட்ட கல்வி அலுவலர் அரவிந்த், எல்லாபுரம் வட்டார கல்வி அலுவலர் கல்பனா ஆகியோர் கலந்துகொண்டு, இவ்வுலகில் நீர்இன்றி எந்த உயிரும் வாழமுடியாது, நீரீன் முக்கியத்துவம் மற்றும் நீர் பாதுகாப்பு குறித்து பள்ளி மாணவ-மாணவிகளிடையே தீவிர விழிப்புணர்வு ஏற்படுத்தி சிறப்புரையாற்றினர். முடிவில், அனைவரும் உலக நீர் தின உறுதி மொழியினை ஏற்றனர். நிகழ்வில், பள்ளி சக ஆசிரியர்கள், கல்லூரி மாணவர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்

The post பெரியபாளையம் அரசுப் பள்ளியில் நீர் பாதுகாப்பு விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Periypalayam Government School ,Periypalayam ,World Water Day ,Periypalayam Panchayat Government Primary School ,Yellapuram Union ,T. Bosco Agricultural College ,
× RELATED தாமரைப்பாக்கம் அருகே நிழற்குடையை சீரமைக்க கோரிக்கை