சம்பல்: உபி மாநிலம் சம்பல், ஷாஹி ஜமா மசூதியில் கடந்த நவம்பர் 24 ம் தேதி நீதிமன்றத்தின் உத்தரவின்படி தொல்லியல் ஆய்வு மேற்கொள்ள குழு வந்தது. ஆய்வுக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் பயங்கர வன்முறை வெடித்தது. இதில் நான்கு பேர் உயிரிழந்தனர். பல போலீசார் காயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக ஷாஹி ஜமா மசூதி நிர்வாக கமிட்டி தலைவர் ஜாபர் அலியிடம் சிறப்பு புலனாய்வு குழுவினர் நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் ஜாபர் அலியை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது கலவரம், மதம், இனம் மற்றும் மொழி அடிப்படையில் மக்களிடையே பகைமையை உருவாக்குதல், பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது .
The post உபி சம்பல் கலவரம் ஜமா மசூதி தலைவர் கைது appeared first on Dinakaran.