×

பிரியாணி கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது

 

திருச்சி, மார்ச் 23: திருச்சியில் பிரியாணி கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். திருச்சி ஏர்போர்ட் காமராஜர் நகர் கென்னடி தெருவை சேர்ந்தவர் ஜாபர் அலி (35). இவர் திருச்சி-புதுக்கோட்டை சாலையில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவர் நேற்று முன்தினம் (மார்ச்.20) வயர்லெஸ் ரோடு அந்ேதானியார் சர்ச் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அவரை வழி மறித்த, ஏர்போர்ட் குட்டி அம்பலக்காரன்பட்டி பகுதியை சேர்ந்த கோபால் (41) என்பவர், ஜாபர் அலியிடம் பணம் கேட்டுள்ளார். அவர் தர மறுக்கவே, கோபால் கத்தியை காட்டி மிரட்டி, ஜாபர் அலி சட்டைப்பையில் வைத்திருந்த ரூ.1200 ரொக்கத்தை பறித்து சென்றார். இதுகுறித்து ஜாபர் அலி கொடுத்த புகாரின் பேரில் ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிந்து, ரவுடி கோபாலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

The post பிரியாணி கடைக்காரரிடம் கத்தி முனையில் பணம் பறித்த ரவுடி கைது appeared first on Dinakaran.

Tags : Rowdy ,Trichy ,Jafar Ali ,Kennedy Street, Kamaraj Nagar, Trichy Airport ,Trichy-Pudukkottai road… ,
× RELATED கோவையில் துப்பாக்கியுடன் விடியவிடிய...