×

வேலாயுதம்பாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு

 

வேலாயுதம்பாளையம், மார்ச் 23: கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம்-பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் உள்ள உள்ள ஒரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ், பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்களை விற்பனை செய்து வருவதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சண்முகானந்த வடிவேல் தலைமையிலான போலீசார் அந்த பகுதி டீக்கடையில் சோதனை செய்தனர்.

அதில், தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள ஹான்ஸ் ,பான்பராக் மற்றும் பல்வேறு வகையான புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்து கொண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்து விற்பனை செய்த புன்னம் சத்திரம் அருகே அதியமான் கோட்டை லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் மனைவி சரண்யா (34), நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சுல்தான்பேட்டை ஒட்டத்தெரு பகுதியை சேர்ந்த டீ மாஸ்டர் கார்த்தி (30) ஆகிய இருவர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வேலாயுதம்பாளையம் அருகே புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : Velayudhampalayam ,Velayudhampalayam police ,Velayudhampalayam-Paramathi Vellore road ,Karur district ,Hans ,Panparak ,Tamil Nadu government… ,Dinakaran ,
× RELATED லாலாப்பேட்டை அருகே விட்டுக்கட்டியில்...