×

அணைக்கட்டு டிஎஸ்பி சென்னைக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு

வேலூர், மார்ச் 23: அணைக்கட்டு டிஎஸ்பி சாரதி, சென்னை கடலோர காவல் படைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தில் புதிதாக உருவான அணைக்கட்டு சப் டிவிஷனின் முதல் டிஎஸ்பியாக என்.சி.சாரதி பணியிட மாறுதலாகி வந்தார். இந்நிலையில், சென்னை கடலோர காவல் படை டிஎஸ்பியாக நேற்று முன்தினம் இரவு சாரதி அதிரடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை டிஜிபி சங்கர் ஜிவால் பிறப்பித்துள்ளார். இவருக்கு பதில் டிஎஸ்பி திருநாவுக்கரசு அணைக்கட்டு டிஎஸ்பி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post அணைக்கட்டு டிஎஸ்பி சென்னைக்கு மாற்றம் டிஜிபி உத்தரவு appeared first on Dinakaran.

Tags : DGB ,DSP ,Chennai ,Vellore ,Chennai Coast Guard ,Dam Subdivision ,Vellore district ,Dinakaran ,
× RELATED அரக்கோணத்தில் 31 ஆண்டுகளாக முடியாத...