×

அரசு பள்ளி ஆண்டு விழா

ஓசூர், மார்ச் 23: ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு வட்டார கல்வி அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாமன்ற உறுப்பினர் ஆஞ்சப்பா, எல்லப்பா, ரஜினி, செந்தில்குமார் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினர். மேலும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தனர். தொடர்ந்து மாணவ, மாணவிகளின் கலைநிகழ்ச்சி நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை பள்ளியின் தலைமை ஆசிரியை விஜயலட்சுமி மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Hosur ,Panchayat Union Middle School ,Hosur Corporation ,District Education Officer ,Satishkumar ,Anjappa ,Ellappa ,Rajini ,Senthilkumar ,Dinakaran ,
× RELATED கேஸ் சிலிண்டரில் தீப்பிடித்து சமையல் பொறுப்பாளர் உள்பட 3 பேர் படுகாயம்