×

அரசு பள்ளி ஆண்டு விழா

தேன்கனிக்கோட்டை, மார்ச் 23: தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கெம்பகரை அரசு நடுநிலைப்பள்ளியில் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. தேன்கனிக்கோட்டை அருகே தளி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கெம்பகரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், ஆண்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மோகன் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளின் பல்வேறு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. விழாவில் பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், ஆசிரியர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

The post அரசு பள்ளி ஆண்டு விழா appeared first on Dinakaran.

Tags : Government School Year ,THENKANIKKOTA ,KEMPAKARAI ,GOVERNMENT ,Kempakarai Uratchya Union Secondary School ,Thali Uradachi Union ,Thankanikkot ,Government School Year Festival ,
× RELATED மின் கம்பத்தில் பற்றி எரிந்த தீ