சென்னை : சென்னை மதுரவாயலில் பர்னிச்சர் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 3க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். தீ விபத்தில் ரூ.2 கோடி மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.