×

மாம்பழ புளிசேரி கேரளா (ரெசிபி)

தேவையான பொருட்கள்

பழுத்த மாம்பழம் 1
புளிப்பில்லாத தயிர் 3/4 கப்
ம.தூள் 1/2 டீ ஸ்பூன்
உப்பு ருசிக்கு

அரைப்பதற்கு:-

தேங்காய் துண்டுகள் 4 டேபிள் ஸ்பூன்
சீரகம் 1 ஸ்பூன்
ப.மிளகாய் 2
அரிசி மாவு 1- 1 1/2 ஸ்பூன்
தனி மி.தூள் 1 ஸ்பூன்
தாளிக்க:- கடுகு 1 டீ ஸ்பூன்
வெந்தயம் 1/2 டீ ஸ்பூன்
குண்டு மிளகாய் 3
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
தே.எண்ணெய் 2 1/2 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு

செய்முறை:

தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.சிறிய மிக்ஸி ஜாரில், தேங்காய், ப.மிளகாய், சீரகம், அரிசிமாவு, மிளகாய்த்தூள், தண்ணீர் சிறிது சேர்த்து மைய அரைக்கவும்.அரைத்ததை, தயிருடன் சேர்த்து கட்டியில்லாமல் நன்கு கரைத்துக் கொள்ளவும்.மாம்பழத்தை சுத்தம் செய்து, பிளேட்டில் பெரிய துண்டுகளாக நறுக்கவும். அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 1 ஸ்பூன் தே.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின மாம்பழம், ம.தூள், உப்பு, தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.மாம்பழம் பாதி வெந்ததும், அரைத்த விழுதை, சேர்த்து, ஒரு பொங்கு வந்ததும், அடுப்பை நிறுத்தி விட்டு மேலே 1 ஸ்பூன் காய்ச்சாத தே.எண்ணெய் ஊற்றி, கிளறி இறக்கவும்.கடாயில், 1/2 ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு, சூடானதும், கடுகு போட்டு வெடித்ததும், வெந்தயம், மிளகாய், கறிவேப்பிலை தாளிக்கவும்.தாளித்ததை கொட்டவும்.பிறகு பௌலுக்கு மாற்றவும்.இப்போது மாம்பழ புளிசேரிதயார்.

The post மாம்பழ புளிசேரி கேரளா (ரெசிபி) appeared first on Dinakaran.

Tags :
× RELATED முருங்கைக் கீரை சாம்பார்