தேவையான பொருட்கள்
உதிரியாக வடித்த சாதம் 3கப் (வெண்புழுங்கலரிசி)
3மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு
மீடியம் சைஸ் வெங்காயம் 4
ம.தூள் 1 டீ ஸ்பூன்
தனி மி.தூள் 2 ஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா தூள் 1 டீ ஸ்பூன்
கல் உப்பு ருசிக்கு
கறிவேப்பிலை 2 ஆர்க்கு
தே.எண்ணெய் 2 டேபிள் ஸ்பூன்
நெய் 1 ஸ்பூன்
தண்ணீர் தேவையான அளவு
செய்முறை:
தேவையான பொருட்களை தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி, சற்று பெரிய துண்டுகளாக தண்ணீரில் நறுக்கிப் போடவும்.வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து, கடாயில், 2 டேபிள்ஸ்பூன், தே.எண்ணெய் விட்டு சூடானதும், நறுக்கின உருளைக்கிழங்கு, ம.தூள், மி.தூள், உப்பு, சேர்த்து நன்கு பொரித்து, பௌலில் எடுக்கவும்.மீதமுள்ள எண்ணெயில், வெங்காயம், ம.தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு, கறிவேப்பிலை, சேர்த்து, கண்ணாடி பதத்திற்கு, நன்கு வதக்கியதும், பொரித்த உருளைக்கிழங்கு, கரம் மசாலா தூள், சேர்த்து வதக்கி அடுப்பை நிறுத்தி விடவும். அடுத்து வடித்த சாதத்தை சேர்த்து, மேலே 1 ஸ்பூன் நெய் விட்டு நன்கு கிளறவும்.இப்போது பொட்டேட்டோ ரைஸ் தயார்.
The post ஸ்பைஸி பொட்டேட்டோ ரைஸ் appeared first on Dinakaran.