×

புடலங்காய், கோஸ் பொரியல்

தேவையான பொருட்கள்

2மீடியம் சைஸ் புடலங்காய்
1/4 பகுதிகோஸ்
டீ ஸ்பூன்ம.தூள் 3/4
தனி மி.தூள் 1/2 டீ ஸ்பூன்
ருசிக்குஉப்பு

தாளிக்க:-

1 டீ ஸ்பூன்கடுகு
1 ஸ்பூன்உ.பருப்பு
1 ஆர்க்குகறிவேப்பிலை
1 ஸ்பூன்எண்ணெய்

அலங்கரிக்க:

வட்டமாக நறுக்கின புடலங்காய்,
பொடியாக நறுக்கிய கோஸ்

செய்முறை:

புடலங்காய், கோவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.அடுப்பை மிதமான தீயில் வைத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும், கடுகு, உ.பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.தாளித்ததும், நறுக்கின காய்கறிகள், ம.தூள், மி.தூள், உப்பு போட்டு, சிறிது தண்ணீர் தெளித்து நன்கு வதங்கியதும், அடுப்பை நிறுத்தி விட்டு இறக்கவும்.இறக்கியதும், பௌலுக்கு மாற்றவும்.இப்போது புடலங்காய் கோஸ் பொரியல் தயார்.

The post புடலங்காய், கோஸ் பொரியல் appeared first on Dinakaran.

Tags :
× RELATED முருங்கைக் கீரை சாம்பார்