திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை பிரசவவார்டு பகுதியில் உள்ள இரும்பு பைப்பில் நேற்றிரவு 5 அடி நீள நல்ல பாம்பு புகுந்தது. இதை பார்த்த நோயாளிகள், அவர்களின் உறவினர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். உடனே திருவள்ளூரில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் வில்சன் ராஜ்குமார் தலைமையில், அதிகாரிகள் விரைந்தனர். அங்கு இரும்பு பைப்புக்குள் பதுங்கியிருந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகில் உள்ள காட்டில் விட்டனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
The post திருவள்ளூர் ஜி.ஹெச்சில் புகுந்த 5 அடி நீள நல்ல பாம்பு appeared first on Dinakaran.