அச்சிறுப்பாக்கம் அருகே வாகன சோதனையில் அதிரடி: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற 39 மாடுகள் மீட்பு


மதுராந்தகம்: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கண்டெய்னர் லாரி மூலம் மாடுகள் கடத்தப்படுவதாக கோரக்தல் அமைப்பின் மாநில தலைவர் ரகுராம்ஷர்மா, அச்சிறுப்பாக்கம் போலீசில் புகார் செய்தார். உடனே போலீசார் இன்று அதிகாலை, அச்சிறுப்பாக்கம் அடுத்த ஆத்தூர் சுங்கச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு கண்டெய்னர் லாரியை மடக்கி சோதனை நடத்தினர். அதில், 33 பசு மாடுகள், 6 எருமை மாடுகள் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. அந்த மாடுகளை போலீசார் மீட்டனர்.

லாரியை சோதனை செய்ததில் மாடுகளுக்கு தண்ணீரோ, தீவனமோ இல்லை. காற்று வசதியும் இல்லாமல் கன்டெய்னரில் அடைத்து கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பந்தமாக லாரி உரிமையாளர் சம்சுதீன், ஓட்டுநர் சண்முகசுந்தரம் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட மாடுகள் காப்பகமான கோசாலையில் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

The post அச்சிறுப்பாக்கம் அருகே வாகன சோதனையில் அதிரடி: ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு கடத்தி சென்ற 39 மாடுகள் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: