ஆன்லைன் சூதாட்ட விவகார சர்ச்சை.. சூதாட்ட விளம்பரத்தில் நடத்தது தவறு என உணர்ந்தேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!!

சென்னை: ஆன்லைன் சூதாட்ட விளம்பர விவகாரத்தில் காவல்துறையிடம் இருந்து சம்மன் ஏதும் வரவில்லை என நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம் அளித்திருக்கிறார். வாழ்க்கையை அழிக்கும் ஆன்லைன் சூதாட்டத்திற்கு இளைஞர்கள் அடிமையாக வேண்டாம் என்று அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது;

2016-ம் ஆண்டு ஆன்லைன் சூதாட்ட விளம்பரத்தில் நடித்தது உண்மைதான். ஒரு வருடம் அந்த விளம்பரத்திற்கு ஒப்பந்தம் செய்திருந்தால் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் பின் அது தவறு என உணர்ந்ததால் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை. அதற்கு பிறகு ஒரு வருடம் கழித்து அதே விளம்பரத்தில் என்னை நடிக்க கேட்டார்கள். ஆனால் நான் நடிக்க முடியாது என மறுத்துவிட்டேன். விளம்பரத்தில் நடித்ததற்காக காவல்துறையிடம் இருந்து சம்மன் ஏதும் வரவில்லை.

குறிப்பிட்ட நிறுவனம் அந்த விளம்பரத்தை 2021ம் ஆண்டில் மீண்டும் பயன்படுத்தியதால், அந்த நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி நிறுத்தினேன். ஆன்லைன் சூதாட்டங்களை ஊக்குவிக்கும் விளம்பரங்களில் நடிக்கக் கூடாது என அப்போதே முடிவு எடுத்துவிட்டேன். இளைஞர்களுக்கு நான் ஒரே ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன். கேமிங் செயலிகளை பயன்படுத்தாதீர்கள். ஆன்லைன் சூதாட்டம் வாழ்க்கையை அழித்துவிடும், இளைஞர்கள் சூதாட்டத்திற்கு அடிமையாக வேண்டாம் என கூறினார்.

The post ஆன்லைன் சூதாட்ட விவகார சர்ச்சை.. சூதாட்ட விளம்பரத்தில் நடத்தது தவறு என உணர்ந்தேன்: நடிகர் பிரகாஷ்ராஜ் விளக்கம்!! appeared first on Dinakaran.

Related Stories: