×

கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு

 

திருச்சி, மார்ச் 21: தண்ணீர் அமைப்பு, கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியின் தண்ணீர் சுற்றுச் சூழல் மாணவர் மன்றம் சார்பில் மார்ச்.22 உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்வு மற்றும் உறுதிமொழி ஏற்பும் நேற்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முதல்வர் முனைவர் நடராஜன் தலைமை வகித்தார். தண்ணீர் அமைப்பு செயல் தலைவர் நீலமேகம் முன்னிலை வகித்தார். உலகத் தண்ணீர் தினத்தை முன்னிட்டு ஐ.நா சபை இந்த ஆண்டு “பனிப்பாறையைப் பாதுகாப்போம்” என்ற கருப்பொருளை அறிவித்துள்ளது.

இந்த தலைப்பில் நிகழ்வின் ஒருங்கிணைப்பாளரும் தண்ணீர் அமைப்பின் செயலாளருமான தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் சதீஷ் குமார் உரையாற்றினார். காலநிலை மாற்றத்தால் புவி வெப்பமயமாதல் நிகழ்வினால் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகுதல் நிகழ்கிறது. ஆதலால் கடல் மட்டம் உயர்கிறது. கடல் மட்டம் உயர்வதால் இயற்கையில் பல்வேறு மாற்றங்கள் பேரிடர்கள் ஏற்படுகிறது. என்றார். தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றனர்.

The post கலைக் காவிரி நுண்கலைக் கல்லூரியில் உலக தண்ணீர் தின உறுதிமொழி ஏற்பு appeared first on Dinakaran.

Tags : World Water Day ,Kalaik Cauvery Fine Arts College ,Trichy ,Water Organization ,Water Environment Student Council ,Kalaik Cauvery Fine Arts College.… ,Dinakaran ,
× RELATED விழிப்புணர்வு ஏற்படுத்தி நீரின்...