- மீக்காரன்பட்டி
- குலிதலை
- ஆதி திராவிடர்
- அருந்ததி
- கிருஷ்ணராயபுரம் தாலுக்கா
- கிழுவம்பாடி
- நொச்சிப்பட்டி
- ஆண்டி நாயக்கனூர்
- சீலமநாயக்கனூர்
குளித்தலை, மார்ச் 21: கிருஷ்ணராயபுரம் தாலுகா குறிக்காரன்பட்டி கிராமத்தில் ஆதி திராவிடர், அருந்ததி இன மக்கள் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் அருகாமையில் கிழுவம்பாடி, நொச்சிப்பட்டி மற்றும் ஆண்டி நாயக்கனூர், சீலமநாயக்கனூர் கிராமங்கள் உள்ளன.
இப்பகுதி மக்கள் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கு 3 கிமீ தூரம் உள்ள வேப்பங்குடி நியாயவிலை கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால் அனைவரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். தற்போது மாதம் இரண்டாவது சனிக்கிழமை மட்டும் மொபைல் ஷாப் வந்து பொருட்களை வழங்கி வருகிறது. எனவே குறிகாரம்பட்டி காலனி பகுதியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post குறிக்காரன்பட்டியில் பகுதி நேர ரேஷன் கடை அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.