×

அரசு கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா

 

அரவக்குறிச்சி, மார்ச் 21: அரவக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை சார்பில் பொன்னணி தமிழ் இலக்கிய மன்ற இலக்கிய விழா நேற்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் வசந்தி தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட அரவக்குறிச்சியை சேர்ந்த வழக்கறிஞர் முகமது பஜ்லுல் ஹக், உன்னை உயர்த்தும் தமிழ் மற்றும் தமிழால் உயர்வோம் என்ற தலைப்பில் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் தமிழ் துறையின் பொறுப்பு துறை தலைவராக பணியாற்றி வரும் முனைவர் காளீஸ்வரி முன்னிலை வகித்தார். தமிழ் துறை சார்பில் நடைபெற்ற இவ்விழாவை முனைவர் சிந்து மற்றும் முனைவர் முரளி ஆகிய பேராசிரியர்கள் நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

The post அரசு கல்லூரியில் தமிழ் இலக்கிய மன்ற விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Literature Club Ceremony ,Government College ,ARAWAKURICHI ,PONNANI TAMIL LITERARY FORUM ,TAMIL DEPARTMENT ,ARAWAKURICHI GOVERNMENT COLLEGE OF ARTS AND SCIENCES ,College Principal ,Vasanti ,Tamil Literature Forum Festival ,
× RELATED ஜெயங்கொண்டம் அரசு கல்லூரி ஆண்டு விழா...