தானேஸ்வரன் லண்டனில் வேலை செய்து வருவதால் திருமணம் முடிந்ததும் மனைவி சுவாதியை லண்டன் அழைத்துச் சென்று குடும்பம் நடத்தினார். இந்நிலையில், சுவாதி, தானேஸ்வரன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, சுவாதி கடந்த வாரம் லண்டனில் இருந்து சென்னையில் உள்ள மாமனார் வீட்டிற்கு வந்தார். மேலும், கணவன் தானேஸ்வரனிடமிருந்து விவாகரத்து பெறுவதற்கான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனிடையே லண்டனில் இருந்த தானேஸ்வரன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னை வந்துள்ளார். அப்போது, தம்பதி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் மனமுடைந்த சுவாதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
தகவலறிந்த புதுவண்ணாரப்பேட்டை போலீசார், சுவாதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், பிரேத பரிசோதனை முடிந்து சுவாதியின் உடலை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் வாங்க மறுத்தனர். மேலும், சுவாதியின் இறப்பிற்கு காரணமான தானேஸ்வரன் மற்றும் அவரது பெற்றோரை கைது செய்ய வேண்டும், என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஸ்டான்லி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வண்ணாரப்பேட்டை துணை ஆணையர் சக்திவேல் மற்றும் தண்டையார்பேட்டை தாசில்தார் பிரமிளா ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, தானேஸ்வரன் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே சுவாதியின் உடலை வாங்குவொம், என்று கூறி தொடர்ந்து மறியலில் ஈடுபட்டனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும், என்று காவல்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதையடுத்து, சுவாதியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலைந்து சென்றனர். பொதுமக்கள் சாலை மறியலால் சுமார் 1 மணிநேரம் போக்குவரத்து பாதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருமணமாகி ஓராண்டு ஆகியுள்ளதால் ஆர்டிஓ விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
The post திருமணமான ஓராண்டில் இளம்பெண் தற்கொலை கணவன் குடும்பத்தினர் மீது நடவடிக்கை கோரி மறியல்: சடலத்தை வாங்க மறுத்ததால் பரபரப்பு appeared first on Dinakaran.