தேவையான பொருட்கள்:
1/4 கி மட்டன் (எலும்பு)
2 டேபிள்ஸ்பூன் பொடியாக நறுக்கிய வெங்காயம்
1தக்காளி நறுக்கியது
1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
1பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது
1 டேபிள்ஸ்பூன் மட்டன் மசாலா பொடி
1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
1 டீஸ்பூன் மிளகு தூள்
1 டேபிள்ஸ்பூன் எண்ணெய்
1 டீஸ்பூன் சீரகம்
1பிரியாணி இலை
10கறிவேப்பிலை இலைகள்
கையளவு கொத்தமல்லி இலை பொடியாக நறுக்கியது
தேவையானஅளவு உப்பு
தேவையானஅளவு தண்ணீர்
செய்முறை:
முதலில் மட்டனை (எலும்பு) அரிசி களைந்த தண்ணீர் ஊற்றி கழுவி எடுத்து கொள்ளவும். பிறகு குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம் மற்றும் பிரியாணி இலை சேர்க்கவும்.
இப்போது வெங்காயம், பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.இப்போது மட்டன் (எலும்பு) மஞ்சள் தூள், மட்டன் மசாலா பொடி, மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி விடவும். 5 நிமிடங்கள் கழித்து 1/2 லி தண்ணீர் சேர்த்து உப்பு காரம் சரி பார்த்து விசில் போடவும்.5-6 விசில் விட்டு காஸ் போனதும் திறந்து கொத்தமல்லி இலை தூவி சூடாக பரிமாறவும்.
The post மட்டன் சூப் appeared first on Dinakaran.