தேவையானவை:
பாசுமதி அரிசி – 1 கப்,
பெரிய நெல்லிக்காய் – 8,
கொத்தமல்லித் தழை – 1 கப்,
பச்சை மிளகாய் – 3,
இஞ்சி – சிறிய துண்டு, வறுத்த வேர்க்
கடலை – ¼ கப்,
உப்பு – தேவைக்கேற்ப,
எண்ணெய் – 3 டீஸ்பூன்,
பெருங்காயம் – இரண்டு சிட்டிகை,
கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு – தலா 1 டீஸ்பூன்.
செய்முறை:
நெல்லிக்காயை துருவி, இஞ்சி, பச்சை மிளகாயை சுத்தம் செய்து வைக்கவும். வேர்க்கடலையை தோல் நீக்கி வைக்கவும். இஞ்சி, பச்சைமிளகாய், நெல்லிக்காய் துருவல், ெகாத்தமல்லித்
தழையை சேர்த்து மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். சாதத்தை உதிர் உதிராக வடித்து ஆறவைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் போட்டு பருப்புகள் பொன்னிறமாக வந்ததும் அரைத்த கொத்தமல்லித் தழை கலவையை போட்டு, உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். வேர்க்கடலையை சேர்த்து சாதத்துடன் நன்றாக கலக்கவும். சுவையான நெல்லிக்காய் சாதம் தயார்.
The post கொத்தமல்லி நெல்லிக்காய் சாதம் appeared first on Dinakaran.