×

நீலகிரி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேச்சு நடைபாதை ஏற்படுத்தி தர பொது மக்கள் கோரிக்கை

ஊட்டி, மார்ச் 20: நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே கேத்தி பாலாடா, செலவிப் நகர் கிராமம் உள்ளது. அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட இக்கிராமத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இக்கிராமத்தில் வசிக்க கூடிய பொது மக்கள் காய்கறி மற்றும் தேயிலை தோட்டங்களுக்கும், கட்டுமான பணிகளுக்கும் கூலி வேலைக்கு சென்று பிழைப்பு நடத்தி வருகின்றனர். இக்கிராமத்தில் நடைபாதை, குடிநீர் உள்ளிட்ட போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால் அவதியடைந்து வருகின்றனர். குறிப்பாக போதிய நடைபாதை வசதி இல்லாததால் காய்கறி தோட்டங்களுக்கு நடுவே நடந்து வந்து கிராமத்திற்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் இருசக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள் சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்தி விட்டு நடந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே செலவிப் நகர் கிராமத்திற்கு கான்கிரீட் நடைபாதை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

The post நீலகிரி மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் நலத்திட்ட உதவிகளை வழங்கி கலெக்டர் பேச்சு நடைபாதை ஏற்படுத்தி தர பொது மக்கள் கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : Nilgiris district administration ,Ooty ,Kethi Palada, Selavi Nagar ,Nilgiris district ,Athikaratty Town Panchayat ,Dinakaran ,
× RELATED தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டி,...