ரூ.2,000க்கு உட்பட்ட பரிவர்த்தனைக்கு யுபிஐ ஊக்கத்தொகை வழங்க ரூ.1,500 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

புதுடெல்லி: ரூ.2,000க்கு உட்பட்ட குறைந்த மதிப்பிலான பண பரிவர்த்தனைகளை பீம் யுபிஐ ஆப் மூலம் மேற்கொள்வதை ஊக்குவிப்பதற்கான ஊக்கத்தொகை திட்டத்திற்கு ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்ய ஒன்றிய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையில், ‘2024-25ம் நிதியாண்டிற்கான யுபிஐ பரிவர்த்தனை ஊக்கத்தொகை திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் 2024 ஏப்ரல் 1 முதல் 2025 மார்ச் 31 வரையிலான தனிநபர் மூலம் வணிகர்களுக்கு பீம் யுபிஐ ஆப் மூலம் செலுத்தப்பட்ட ரூ.2,000க்கு உட்பட்ட பரிவர்த்தனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்க ரூ.1,500 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது’ என கூறப்பட்டுள்ளது. இந்த திட்டம் சிறு வணிகர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

• பால் உற்பத்தியை பெருக்க ரூ.3,400 கோடியில் ராஷ்டிரிய கோகுல் மிஷன் (தேசிய கால்நடை இயக்கம்) மற்றும் ரூ.2,790 கோடியில் தேசிய பால் பொருட்கள் மேம்பாட்டு திட்டத்திற்கும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

• அசாமில், ஆண்டுக்கு 12.7 லட்சம் மெட்ரிக் டன் யூரியா உற்பத்தித் திறன் கொண்ட புதிய யூரியா உற்பத்தி ஆலை அமைக்கவும் மகாராஷ்டிராவில் 29.21 கிமீ தொலைவுக்கு ரூ.4,500 கோடியில் 6 வழி தேசிய பசுமை நெடுஞ்சாலை அமைக்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

The post ரூ.2,000க்கு உட்பட்ட பரிவர்த்தனைக்கு யுபிஐ ஊக்கத்தொகை வழங்க ரூ.1,500 கோடி: ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் appeared first on Dinakaran.

Related Stories: