×

ரயில்வேயில் 835 அப்ரன்டிஸ்கள் ஊட்டி வேலிவியூ பகுதியில் ராஜ ராஜேஷ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா

ஊட்டி, மார்ச் 19: ஊட்டி வேலிவியூ பகுதியில் பழமை வாய்ந்த ராஜ ராஜேஷ்வரி அம்மன் கோயில் 12ம் ஆண்டு தேர்த்திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது. நீலகிரி மாவட்டம், ஊட்டி வேலிவியூ பகுதியில் பழமை வாய்ந்த ஸ்ரீசெல்வ கணபதி, பாலமுருகன், கன்னிமார் தெய்வங்களுடன் எழுந்தருளி அருள் பாலித்துவரும் அன்னை  ராஜ ராஜேஸ்வரி அம்மன் ஆலன 12ம் ஆண்டு தேர் திருவிழா வரும் 23ம் தேதி நடக்கிறது. இதனை முன்னிட்டு கடந்த 15ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. தொடர்ந்து 21ம் தேதி வரை தினசரி அர்ச்சனை நடைபெறுகிறது. 22ம் தேதி காலை 10.20 மணிக்கு தீர்த்த குடம் எடுத்தல், உற்சவ மூர்த்திகளுக்கு அபிஷேக அலங்காரம், பகல் 2 மணிக்கு மகா தீபாராதனை, மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, பிரசாத விநியோகம் நடக்கிறது. 23ம் தேதியன்று காலை 7 மணி முதல் யாக பூஜை நடக்கிறது. பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது. பகல் 1.30 மணிக்கு ஸ்ரீ அம்மன் திருவீதி உலா துவங்கி நடக்கிறது. இரவு 7.30க்கு மகா தீபாராதனை, மங்கள ஆரத்தி றடக்கிறது. 25ம் தேதியன்று மாலை 6 மணிக்கு மஞ்சள் நீராட்டு விடையாற்றி பூஜையுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

The post ரயில்வேயில் 835 அப்ரன்டிஸ்கள் ஊட்டி வேலிவியூ பகுதியில் ராஜ ராஜேஷ்வரி அம்மன் கோயில் தேர்த்திருவிழா appeared first on Dinakaran.

Tags : Raja Rajeshwari Amman temple chariot festival ,Ooty Valley View ,Ooty ,annual ,festival ,Raja Rajeshwari Amman temple ,Sriselva Ganapathy ,Balamurugan ,Kannimar… ,
× RELATED தொடர் விடுமுறை எதிரொலி; ஊட்டி,...