இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில சந்தோஷ் ஷா என்ற சந்தோஷ் சிங், ராதே என்ற ராதே ஷியாம் உள்பட 17 கொள்ளையர்கள் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. தொடர்ந்து இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணைக்கு இடையே குற்றம்சாட்டப்பட்ட 17 கொள்ளையர்களில் சந்தோஷ் சிங், ராதே ஷியாம் உள்பட 14 பேர் இறந்து விட்டனர். 44 ஆண்டுகளுக்கு முன் நடந்த கொடூர கொலை வழக்கில் கப்டன் சிங்(60), ராம் பால்(60) மற்றும் ராம் சேவக்(70) ஆகிய மூன்று பேரையும் குற்றவாளிகள் என கடந்த 12ம் தேதி சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி, தண்டனை விவரங்களை ஒத்தி வைத்தது. குற்றவாளிகள் கப்டன் சிங், ராம் பால் மற்றும் ராம் சேவக் ஆகியோருக்கு மரண தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
The post 24 தலித்துகள் படுகொலை உ.பியில் 3 பேருக்கு மரண தண்டனை appeared first on Dinakaran.