இந்நிலையில் பிரதமர் மோடியை நேற்று இளையராஜா சந்தித்து தனது சிம்பொனி தொடர்பாக வாழ்த்து பெற்றுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த இளையராஜா, “பிரதமர் மோடியுடன் மறக்கமுடியாத சந்திப்பு. எனது சிம்பொனி ‘வேலியன்ட்’ உட்பட பல விஷயங்களைப் பற்றி நாங்கள் பேசினோம். அவரது பாராட்டையும் ஆதரவையும் பணிவுடன் பெற்றுக் கொண்டேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
* வரலாறு படைத்துள்ளார்: மோடி புகழாரம்
இளையராஜா உடனான சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘நமது இசை மற்றும் கலாச்சாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய இசை மேதையும், மாநிலங்களவை உறுப்பினருமான இளையராஜாவைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் எல்லா வகையிலும் ஒரு முன்னோடியாகத் திகழ்கிறார். சில நாட்களுக்கு முன்பு லண்டனில் தமது முதலாவது மேற்கத்திய கிளாசிக்கல் சிம்பொனியான வேலியன்ட்டை வழங்கியதன் மூலம் மீண்டும் வரலாறு படைத்துள்ளார்’’ என்றார்.
The post பிரதமர் மோடியுடன் இளையராஜா சந்திப்பு: மறக்க முடியாத சந்திப்பு என நெகிழ்ச்சி appeared first on Dinakaran.