நாகர்கோவில், மார்ச் 18:அவ்வை சண்முகம் சாலையில் வாகன நிறுத்தம் அமைக்கும் பணியை மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார். நாகர்கோவில் மாநகர பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க வாகன நிறுத்தங்கள் மாநகராட்சியால் ஏற்படுத்தப்பட்டு வருகிறது,. இதன்படி அவ்ைவ சண்முகம் சாலையில் செம்மாங்குளம் கரையில் பூங்கா அருகே வாகன நிறுத்தம் அமைக்க மேயர் மகேஷ் ஆய்வு செய்திருந்தார்.
அதன்படி,ரூ.4.20 லட்சம் மதிப்பீட்டில் வாகன நிறுத்தம் அமைக்க கம்பி வேலி மற்றும் அலங்கார தரைகற்கள் அமைக்கும் பணியையும், 41வது வார்டு வட்டவிளை சானல் கரை அருகில் இந்து கல்லூரி 5வது குறுக்குத் தெருவில் ரூ.4 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி ஆகியவற்றை மேயர் மகேஷ் நேற்று காலை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், மண்டலத் தலைவர் அகஸ்டினா கோகில வாணி, கவுன்சிலர்கள் அக்சயா கண்ணன், அனிலா சுகுமாறன், திமுக மாநகர அவைத் தலைவர் பன்னீர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
The post அவ்ைவ சண்முகம் சாலையில் வாகன நிறுத்தம் மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார் appeared first on Dinakaran.