அனைவரையும் முதல்வர் ஒன்று திரட்டி வருவதால் அமலாக்கத் துறையை பயன்படுத்தி பாஜ ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது: மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி நேற்று அளித்த பேட்டி: நேற்று காலையிலே பாஜ கட்சி ஒரு ஊர்வலம் கேட்டு அனுமதி கிடைக்காததால், அதன் தலைவர் அண்ணாமலை முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து தவறான குற்றச்சாட்டைச் சொல்லியிருக்கின்றார். முழுக்க முழுக்க இது சட்டவிரோதமான செயல். பல்வேறு வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பாஜவில் இணைந்தால், சிபிஐ-அமலாக்கத்துறை வழக்குகளை முடித்து வைக்கிறோம் என்று பாஜ பேரம் பேசியதை ஆம் ஆத்மி கட்சியின் மணி சிசோடியா அம்பலப்படுத்தினார்.

நீங்கள் ஏன் பாஜகவில் சேரக்கூடாது என்று அமலாக்கத்துறைக் கேட்டது என்று நீதிமன்றத்திலே செந்தில் பாலாஜியின் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் அதிர்ச்சி தகவலை வெளியிட்டார். அதானியுடைய செல் நிறுவனத்திலே முதலீடு செய்யப்பட்டதில் ரூ.20,000 கோடி யாருக்கு சொந்தமானது. அந்த பணம் எங்கிருந்து வந்தது. இதுபற்றி அமலாக்கத்துறை ஏன் விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை? பிரதமர் மோடி அமலாக்கத்துறையிடம் அதானி செல் விவகாரத்திலே நடவடிக்கை எடுக்க ஆணையிடுவாரா?

கர்நாடகவிலே பாஜக முதல்வர்கள் எடியூரப்பா, பசவராஜ் பொம்மை ஆகியோரின் ஆட்சியிலே 40 சதவித கமிஷன் ஊழல் என குற்றாச்சாட்டு எழுந்தபோது, சட்டவிரோத பணம் பரிமாற்றம் என்று சொல்லி மோடியின் அமலாக்கத்துறை ஏன் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை? இதற்கெல்லாம் காரணமாக உள்ளவர் மோடியை என்று, அவரை நாங்கள் A1 என்று சொன்னால், அண்ணாமலை ஏற்றுக்கொள்வாரா? எனவேதான், இன்றைக்கு அமலாக்கத்துறையை அவர்கள் அரசியல் பழிவாங்கல் கருவியாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறார்கள். 1000 கோடி ஊழல் என்று சொல்கிறார்கள். ரெய்டு நடந்து எத்தனை நாட்கள் ஆகிவிட்டது? ஏதாவது ஆதராம் இருக்கிறதா? இந்தகுற்றச்சாட்டை அமைச்சர் செந்தில் பாலாஜி தெளிவாக மறுத்து இருக்கிறார். மதுரை அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி ரூ.20 லட்சம் கேட்டு மாட்டிகொண்டார். இதுதான் அமலாக்கத்துறையின் லட்சணம். அமலாக்கத்துறையில் இருப்பவர்கள் எல்லோரும் உத்தமர் கிடையாது. இவ்வாறு அவர் கூறினார்.

The post அனைவரையும் முதல்வர் ஒன்று திரட்டி வருவதால் அமலாக்கத் துறையை பயன்படுத்தி பாஜ ஊழல் குற்றச்சாட்டு சுமத்துகிறது: மோடியை முதல் குற்றவாளி என்று சொன்னால் அண்ணாமலை ஏற்பாரா? சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: