போர் நிறுத்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்க பணய கைதியை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்: இது ஒரு விதிவிலக்கான சலுகை என அறிவிப்பு

கெய்ரோ: இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்தினால் மட்டுமே அமெரிக்க பணயக் கைதி மற்றும் 4 பேரின் உடல்களை விடுவிப்போம் என ஹமாஸ் நிபந்தனை விதித்துள்ளது. இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான 7 வார போர் நிறுத்தத்தை தொடர்ந்து காசாவில் அமைதி திரும்பி உள்ளது. 2ம் கட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் எகிப்தில் நடந்து வருகின்றன. இதற்கிடையே, இஸ்ரேல் மீண்டும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை அமல்படுத்த ஒப்புக் கொண்டால், தங்களிடம் உள்ள அமெரிக்க-இஸ்ரேலிய பணயக் கைதியையும், பலியான 4 பணயக் கைதிகளையும் உடல்களையும் விடுவிக்க தயார் என ஹமாஸ் கூறி உள்ளது.

கடந்த 2023 அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் நடத்தப்பட்ட தாக்குதலின் போது, 21 வயதான எடன் அலெக்சாண்டர் என்கிற அமெரிக்க-இஸ்ரேலியரை ராணுவ தளத்தில் இருந்து ஹமாஸ் கடத்திச் சென்றது. காசாவில் பணயக் கைதியாக உள்ள ஒரே அமெரிக்கர் இவர் மட்டுமே. இது ஒரு விதிவிலக்கான சலுகை என கூறி உள்ள ஹமாஸ், அமெரிக்க பணயக் கைதி விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து போர்நிறுத்தம் தொடங்க வேண்டும், அது 50 நாட்களுக்கு மேல் நீடிக்கக் கூடாது என நிபந்தனைகள் விதித்துள்ளது. இதற்கு இஸ்ரேல் தரப்பில் எந்த பதிலும் தரப்படவில்லை.

The post போர் நிறுத்தத்தை அமல்படுத்தினால் அமெரிக்க பணய கைதியை விடுவிக்க ஹமாஸ் சம்மதம்: இது ஒரு விதிவிலக்கான சலுகை என அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: