இதற்கு பதிலடி தெரிவிக்கும் வகையில், தமிழ் படங்கள் இந்தியில் மொழிபெயர்ப்பு செய்வது பற்றி பவன் கல்யாண் கூறிய கருத்துக்கு கனிமொழி எம்.பி கண்டனம் தெரிவித்துள்ளார். தொழில்நுட்பம் மூலம் மொழி பேதங்களை கடந்து திரைப்படங்கள் பார்க்கப்படுகின்றன. வசூலுக்காக மட்டும் தமிழ் படங்களை இந்தியில் டப் செய்யலாமா என ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் கேட்டிருந்தார். பாஜக கூட்டணிக்கு முன்பும் பின்பும் இந்தி நிலைப்பாட்டில் பவன் கல்யாணிடம் மாற்றம் என கனிமொழி எம்.பி. விமர்சனம் செய்துள்ளார். 2017ல் இந்தியை எதிர்த்த பவன்கல்யாண் தற்போது, பாஜக கூட்டணியிலுள்ளதால் ஆதரித்து பேசுகிறார். தமிழ்படங்களை, இந்தியில் டப்பிங் செய்யும்போது தமிழக அரசியல்வாதிகள் எதிர்ப்பதில்லை என தெரிவித்தார்.
The post இந்தி மொழி குறித்த பவன் கல்யாண் கருத்துக்கு திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி கண்டனம்..!! appeared first on Dinakaran.