2வது நாளாக எடப்பாடியை புறக்கணித்த செங்கோட்டையன்: தனித்து செயல்படும் செங்கோட்டையனால் அதிமுகவில் சலசலப்பு!!

சென்னை: சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளாக எடப்பாடி பழனிசாமியை சந்திக்காமல் சட்டப்பேரவை நிகழ்வில் செங்கோட்டையன் பங்கேற்று இருப்பது தற்போது பேசும் பொருளாகியுள்ளது. நேற்றைய தினம் பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்னதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எதிர்க்கட்சித் தலைவர் அறைக்கு சென்றபோது செங்கோட்டையன் அங்கு செல்லவில்லை. அதை தொடர்ந்து அதிமுகவினர் சட்டப்பேரவையில் நேற்று அமளியில் ஈடுபட்ட போதும் செங்கோட்டையன் அமைதியாக அமர்ந்திருந்தார்.

இந்நிலையில், சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது நாளான இன்றும் அதிமுக எம்.எல்.ஏக்கள் அறைக்கு செங்கோட்டையன் செல்லவில்லை. சபாநாயகருக்கு எதிராக அதிமுக நம்பிக்கையில்லா தீர்மானம் கொடுத்துள்ள நிலையில் சபாநாயகர் அறைக்கு சென்று அவரை செங்கோட்டையன் தனியாக சந்தித்தது தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது. பின்னர் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்ட செங்கோட்டையன் அவை நிகழ்வில் பங்கேற்றுள்ளார். எடப்பாடியை புறக்கணித்துவிட்டு செங்கோட்டையன் தனித்து செயல்படுவதால் தற்போது அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

The post 2வது நாளாக எடப்பாடியை புறக்கணித்த செங்கோட்டையன்: தனித்து செயல்படும் செங்கோட்டையனால் அதிமுகவில் சலசலப்பு!! appeared first on Dinakaran.

Related Stories: