மாநிலத்தின் பொருளாதார அளவை பொறுத்து தான் கடன் வாங்கி உள்ளோம். நிதிக் குழு வரையயை செய்துள்ள அளவுக்குள் நமது கடன் வாங்கும் அளவு உள்ளது. அந்தவகையில், 2024 -25ம் ஆண்டில் ரூ.49 ஆயிரம் கோடி வருவாய் பற்றாக்குறை இருக்கும் என மதிப்பீட்டிருந்தோம். ஆனால், இந்த வருடமே ரூ.46 ஆயிரம் கோடி அதாவது, 3 ஆயிரம் கோடி வரை பற்றாக்குறையை குறைத்துள்ளோம். அடுத்த நிதியாண்டில் இன்னும் இவை குறையும். அதுவும், ஒன்றிய அரசிடம் இருந்து வரவேண்டிய நிதி வரவில்லை; அவை வந்திருந்தால் இன்னும் பற்றாக்குறையை குறைத்திருக்க முடியும்.
அதேபோல், அடுத்த வருடம் ரூ.57 ஆயிரம் கோடி அளவுக்கு மூலதன செலவு செய்வோம் என்று எதிர்பார்கிறோம். நம்முடைய ஜிஎஸ்டி வருவாய் வசூல் நன்றாக உள்ளது. குறிப்பாக, 22 சதவீதம் அளவிற்கு ஜிஎஸ்டி வருவாய் என்பது இருக்கிறது. அதேபோல், மோட்டார் வாகன வரியும் நன்றாக உள்ளது. டிஜிட்டல் பொருளதாரத்தில் அதிக அளவு கவனம் செலுத்தி அதில் வரக் கூடிய வருவாய் வந்து கொண்டு உள்ளதா? என்று ஆய்வு செய்து உள்ளோம்.
சென்னைக்கு அருகில் புதிய நகரம் அமைப்பது தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவகையில் இதற்காக மூன்று இடங்களை ஆய்வு செய்து வருகிறோம். செமி கண்டக்டர் திட்டத்தில் சோதனை வசதி மிகவும் முக்கியமானது. இதை மையமாக வைத்து தான் செமி கண்டக்டர் இயக்கம் செயல்படுத்தப்படும். ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய உலக பொருளதாரத்தில் தினசரி என்ற நடக்கிறது என்பதை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக வளர்ந்து வரும் தொழில்களில் கவனம் செலுத்த உள்ளோம். தற்போது, ஒன்றிய அரசு தர வேண்டிய 2,152 கோடி நிதியை தராவிட்டாலும் பள்ளிக் கல்வித்துறை தேவையான நிதியை எந்தவிதமான தடையும் இன்றி மாநில அரசு வழங்கி வருகிறது. ஒன்றிய அரசிடம் இருந்து பல திட்டங்களில் இருந்து நாம் கிடைக்கும் என நினைத்த தொகை வரவில்லை.
அவை வந்திருந்தால் நமது வருவாய் பற்றாக்குறை நிச்சயம் குறைந்து இருக்கும். மேலும், ஒன்றிய அரசின் நிதி வராத போதிலும்; அரசின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் நிதி மேலாண்மையை பொறுத்த வரையில் தேவையான நேரத்தில் நிதியை அளிக்கிறோம். துறைக்கு அளிக்கப்பட்டு செலவு செய்யப்படாமல் வங்கிகளில் உள்ள ரூ.11 ஆயிரம் கோடி நிதி அந்த துறைகளில் இருந்து எடுத்து தேவையான திட்டங்களுக்கு நிதியை கொடுத்து உள்ளோம். இதுபோன்ற நிதி மேலாண்மையை சரியாக செய்த காரணத்தால் சென்ற நிதியாண்டில் ரூ.3,600 கோடி வரை குறைவாக கடன் வாங்கியுள்ளோம். இந்த வருடம் ரூ.1.05 லட்சம் கோடி கடன் வாங்க உள்ளோம். தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.9 கோடியாக மதிப்பீடப்பட்டுள்ளது. இதன் மூலமாக கடன் வாங்கும் அளவிற்கு மாநில அரசின் கடன் வரம்புக்குள் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
The post ஒன்றிய அரசின் நிதி கிடைக்காத போதிலும் தமிழ்நாட்டின் நிதி மேலாண்மை சிறப்பாக உள்ளது: மாநிலத்தின் மொத்த கடன் ரூ.9 லட்சம் கோடி என மதிப்பீடு; நிதித்துறை செயலர் உதயசந்திரன் பேட்டி appeared first on Dinakaran.