வேலூர்: வேலூர் காட்பாடியில் பைனான்சியர்கள் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் துப்பாக்கி, 4 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கம்பி குத்தியதாக சிகிச்சை பெற்ற பைனான்சியர் அருள்சுடர் உடலில் இருந்து துப்பாக்கி குண்டுகள் அகற்றப்பட்டன. துப்பாக்கிக் குண்டுகள் அகற்றப்பட்டதாக மருத்துவர்கள் தகவல் அளித்த நிலையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.