நாளை மறுநாள் வேளாண்மை பட்ஜெட்டை வேளாண்மைத்துறை அமைச்சர் தாக்கல் செய்வார். இதைத் தொடர்ந்து 17ம் தேதி முதல் சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும். இந்த விவாதத்தில் பங்கேற்று ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவார்கள். இந்த நிலையில் திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை மாலை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறும் என்று அரசு தலைமை கொறடா கா.ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 14-03-2023 (வெள்ளிக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும். அதுபோது கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும், பட்ஜெட் மீதான விவாதத்தில் யார் யார் பேச வேண்டும் என்பது உள்பட பல்வேறு விஷயங்கள் ஆலோசிக்கப்பட உள்ளன.
The post முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம்! appeared first on Dinakaran.