ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே ஒன்னல்வாடி கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (70). சொந்த ஊர் மன்னார்குடி. மனைவி தெரசா (65). இளையமகள் விக்டோரியா திருமணமாகி சென்னையில் கணவர், குழந்தைகளுடன் வசித்து வருகிறார். மூத்தமகள் சகாயராணி திருமணம் செய்து கொள்ளாமல் ஓசூரில் உள்ள நர்சரி ஒன்றில் வேலை பார்க்கிறார்.
தெரசா உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரை, மகள் விக்டோரியா கவனித்து வருகிறார். சகாயராணியும் தாயை பார்க்க சென்னைக்கு சென்றுள்ளார். லூர்துசாமி மட்டும் வீட்டில் தனியாக இருந்த நிலையில், உடன் தெரசாவின் தங்கை எலிசபெத்(60) தங்கி சமைத்து கொடுத்துள்ளார். நேற்று மாலை 6 மணியளவில் லூர்துசாமியின் வீட்டிலிருந்து திடீரென புகை வந்துள்ளது.
தகவலறிந்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார் வந்து பார்த்தபோது லூர்துசாமி மற்றும் எலிசபெத் ஆகியோர் தீக்காயங்களுடன் உயிரிழந்து கிடந்தனர். எலிசபெத் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. முதல் கட்ட விசாரணையில், வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் இருவரையும் தாக்கி கொலை செய்து விட்டு, தீவைத்து எரித்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
The post 2 முதியவர்கள் கொன்று எரிப்பு appeared first on Dinakaran.