காங்கயம், மார்ச் 12: காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாக கடும் வெயில் வாட்டி வதைத்தது. வெயிலின் தாக்கத்தை சமாளிக்க முடியாமல் மக்கள் திணறி வந்தனர். இந்நிலையில், காங்கயம் மற்றும் வெள்ளக்கோவில் சுற்று வட்டார பகுதியில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர், மாலை நேரத்தில் காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான முத்தூர், வெள்ளக்கோவில், நத்தக்காடையூர், நால்ரோடு, மருதுறை, திட்டுப்பாறை, காடையூர், ஊதியூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. காங்கயம் சுற்றுவட்டார பகுதிகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post காங்கயம் சுற்றுவட்டார பகுதியில் கனமழை appeared first on Dinakaran.