மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது திமுக எம்.பி. கிரிராஜன் திட்டவட்டம்

டெல்லி : ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு என்பது கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது என்று திமுக எம்.பி. கிரிராஜன் தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் தொகுதி மறுசீரமைப்பு குறித்து பேசிய அவர், மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறு சீரமைப்பு ஜனநாயகத்திற்கு விரோதமானது என்று சாடினார். நாட்டு நலனுக்காக மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலத்திடம் இருந்து தொகுதிகளின் எண்ணிக்கையை பறித்து, மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத பிற மாநிலங்களிடம் அளிப்பது நியாயமில்லை என்று அவர் எடுத்துரைத்தார்.

மேலும் பேசிய அவர், “மக்கள் தொகையை சிறப்பாக கட்டுப்படுத்திய கேரளா, தமிழ்நாடு, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பால் பல தொகுதிகளை இழக்கும். அதேநேரத்தில் மக்கள் தொகையை கட்டுப்படுத்தாத உத்தரப்பிரதேசம், பீகார்,ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு பல தொகுதிகள் கூடுதலாக கிடைக்கும். மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுசீரமைப்பு, கூட்டாட்சி தத்துவதற்கு எதிரானது. மக்கள் தொகையை கட்டுப்படுத்தியதற்காக தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு தரும் தண்டனையா இது?. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது,”இவ்வாறு தெரிவித்தார்.

The post மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்வதை ஒருபோதும் ஏற்க முடியாது திமுக எம்.பி. கிரிராஜன் திட்டவட்டம் appeared first on Dinakaran.

Related Stories: